Home Featured நாடு இந்திரா காந்தியிடம் பிள்ளைகளை ஒப்படையுங்கள் – மசீச மகளிர் வலியுறுத்து!

இந்திரா காந்தியிடம் பிள்ளைகளை ஒப்படையுங்கள் – மசீச மகளிர் வலியுறுத்து!

576
0
SHARE
Ad

heng-mcaகோலாலம்பூர் – இந்திரா காந்தியின் பிள்ளைகள் மதமாற்றம் செய்யப்பட்ட வழக்கில், நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, இஸ்லாமிற்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ள பாஸ் இளைஞர் பிரிவுக்கு, மசீச கட்சியின் மகளிர் பிரிவு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மசீச மகளிர் பிரிவுத் தலைவர் டத்தோ ஹெங் சியாய் கி கூறுகையில், இந்த வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் கொடுமையான தீர்ப்பை விட, பாஸ் கட்சியின் கருத்து மிகவும் அநீதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திரா காந்தியின் மைனர் பிள்ளைகள் பிறந்த நேரத்தில் எந்த மதத்தில் இருந்தார்களோ அவற்றிலேயே வளர்க்கும் அவரின் உரிமைக்கு பாஸ் கட்சியால் மரியாதை அளிக்க இயலாதா? என்று ஹெங் சியாய் கேள்வி எழுப்பியுள்ளார்.

#TamilSchoolmychoice