Home Featured இந்தியா ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்தது – விமானியின் சாதூர்யத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு!

ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்தது – விமானியின் சாதூர்யத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு!

567
0
SHARE
Ad

Air India planeபோபால் – டெல்லியில் இருந்து மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலுக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்ததால், போபால் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

டயர் வெடித்ததை உணர்ந்த விமானி, சாதூர்யமாக விமானத்தை அவசரமாகத் தரையிறக்கினார். அதனைத் தொடர்ந்து, விமானத்தில் பயணம் செய்த 95 பயணிகளும் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டனர்.

“பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை” என ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.