Home Featured இந்தியா ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் கோளாறு – நடுவானில் பயணிகளுக்கு மூச்சுத் திணறல்!

ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் கோளாறு – நடுவானில் பயணிகளுக்கு மூச்சுத் திணறல்!

567
0
SHARE
Ad

jet 1மும்பை – மும்பையில் இருந்து வியட்னாமின் ஹோசிமினுக்கு, பேங்காக் வழியாக சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விமானப் பயணிகள் அனைவருக்கும், ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் விமானம், மியான்மரின் தலைநகர் யாங்கோனில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

மும்பையில் இருந்து இன்று காலை 9.30 மணியளவில் ஜெட் ஏர்வேஸ் விமானம், 184 பயணிகளுடன் ஹோசிமினுக்கு புறப்பட்டது. போயிங் 739 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம், பேங்காக்கில் தரையிறங்கி பின்னர் ஹோசிமின் புறப்பட வேண்டும். பேங்காக் சென்றடைய  ஒரு மணி நேரம் இருந்தபோது, விமானம் 32 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் பயணித்த சில பயணிகள் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டனர்.

jetஅடுத்த சில மணி நேரங்களில், அனைத்து பயணிகளுக்கும் மூச்சுத் திணறல் ஏற்படத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து விமானப் பணிப்பெண்கள், அவசர அவசரமாக பயணிகளுக்கு ஆக்சிஜன் மாஸ்க்குகளை வழங்கினர். இதையடுத்தே பயணிகள் மூச்சுத் திணறலில் இருந்து தப்பிக்க முடிந்தது. இந்த தகவல், இந்திய விமானத்துறையில் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

#TamilSchoolmychoice

அதன் பிறகு டெல்லியில் இருந்து மற்றொரு ஜெட் ஏர்வேஸ் விமானத்தில், யாங்கூன் பறந்த தொழில் நுட்ப வல்லுநர்கள், அங்கு விமானத்தை ஆராய்ந்து வருகின்றனர். எனினும், எதன் காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது என்பது இதுவரைத் தெரியவில்லை.