Home Featured இந்தியா அமீர்கானை நாங்கள் நீக்கவில்லை – மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் விளக்கம்!

அமீர்கானை நாங்கள் நீக்கவில்லை – மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் விளக்கம்!

1352
0
SHARE
Ad

 

aamir-khanபுது டெல்லி – “அமீர் கானை நாங்கள் நீக்கவில்லை. அவர் எங்களின் தூதுவராகத் தொடர்கிறார்” என இந்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் தனது ‘இன்க்ரெடிபிள் இந்தியா’ பிரச்சாரத்தின் தூதுவர் பதவியில் இருந்து பாலிவுட் நடிகர் அமீர்கானை நீக்கியதாக கடந்த சில மணிநேரங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அமைச்சகம் அமீர் குறித்து வெளியான செய்தி வெறும் வதந்தி என்றும், அவர் தூதுவராகவே தொடர்வார் என்றும் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice