கோலாலம்பூர் – அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராயிஸ் கொலை வழக்கு ஷா ஆலம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அரசு தரப்பில் இருந்து செய்யப்பட்ட கோரிக்கை மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி சித்தி ராட்சியா கமாருடின் வழக்கை மாற்ற அனுமதி வழங்கினார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 177 (A)-வின் கீழ் இந்த வழக்கை ஷா ஆலம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற, அரசு தரப்பு வழக்கறிஞர் அப்துல் ரசாக் மூஸ் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் இராணுவ மருத்துவர் கே.குணசேகரன் (52) மீது கெவின் மொராயிஸ் மொராயிஸ் கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி குற்றவியல் சட்டம் பிரிவு 109 மற்றும் பிரிவு 302-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குணசேகரோடு சேர்த்து, இன்னும் 6 பேர் மீதும் கெவின் மொராயிசை கொலை செய்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.