Home Featured தமிழ் நாடு ஜெயா சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிபதி திடீர் மாற்றம்!

ஜெயா சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிபதி திடீர் மாற்றம்!

505
0
SHARE
Ad

Manorama-Jayalalithaa-walking to pay respectsபுது டெல்லி – தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கின் விசாரணை நீதிபதி ஆர்.கே. அகர்வால் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக நீதிபதி அமிதவ ராய் நியமனம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனி சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கை, நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு தான் விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Madras_HC_judgeஇதற்கிடையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு விசாரணை, வரும் 8-ம் தேதி நடைபெறாது என உச்ச நீதிமன்றப் பதிவுத்துறை அறிவித்துள்ளது.