Home Featured இந்தியா ஜாமீனில் வெளி வர முடியாத படி தோனிக்கு பிடி ஆணை!

ஜாமீனில் வெளி வர முடியாத படி தோனிக்கு பிடி ஆணை!

751
0
SHARE
Ad

dhoni1அனந்த்பூர் – இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் தலைவர் தோனிக்கு, அனந்தப்பூர் நீதிமன்றம், ஜாமீனில் வெளிவர முடியாத படி, பிடி ஆணை பிறப்பித்துள்ளது. விளம்பரம் ஒன்றில் விஷ்ணு அவதாரம் போல் தோனி காட்சி அளித்ததாக, கடந்த 2013-ம் ஆண்டு பெரும் சர்ச்சை வெடித்தது.

dhoniதோனியை சிக்க வைத்துள்ள அந்த புகைப்படம்

அந்த வழக்கில், தோனி, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து புறக்கணித்து வந்ததால், அனந்த்பூர் நீதிமன்றம் இன்று பிடி ஆணை பிறப்பித்துள்ளது. எதிர்வரும் பிப்ரவரி 25-ம் தேதிக்குள், தோனி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.