Home Featured நாடு துணைப் பிரதமரின் மெய்க்காப்பாளர் வீட்டில் துணிகரக் கொள்ளை!

துணைப் பிரதமரின் மெய்க்காப்பாளர் வீட்டில் துணிகரக் கொள்ளை!

532
0
SHARE
Ad

Ahmad Zahid Hamidiகோலாலம்பூர் – அண்மையில் துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடியின் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசையைக் காட்டிய சம்பவம் நடந்து இன்னும் 1 மாதம் கூட ஆகவில்லை அதற்குள் சாஹிட்டின் மெய்க்காப்பாளர் ஒருவரின் வீட்டில் நேற்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

பண்டார் புக்கிட் மஹ்கோத்தாவில் உள்ள அந்த அதிகாரியின் வீட்டில் நேற்று காலை 9.30 மணியளவில் ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்த அதிகாரியின் மனைவியை மிரட்டி பணம், நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மேலும், அதிகாரியின் ஆயுதம் எங்கே என்று கொள்ளையர்கள் கேட்டுள்ளனர். ஆனால் அந்த நேரத்தில் பணியில் இருந்த அந்த அதிகாரி தனது ஆயுதத்தையும் எடுத்துச் சென்றிருந்ததால், அவர்களால் அதைக் கைப்பற்ற இயலவில்லை என்று முன்னணி இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

#TamilSchoolmychoice