Home Featured தமிழ் நாடு பழனி ராஜகோபுரத்தில் பக்தர் தற்கொலை!

பழனி ராஜகோபுரத்தில் பக்தர் தற்கொலை!

1033
0
SHARE
Ad

palani1பழனி – பழனி மலை ராஜகோபுரத்தில் ஏறி, இன்று இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் அடுத்த சில வாரங்களில், தைப்பூசம் திருவிழா கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.

palaniகூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பழனி மலையில் ராஜகோபுரத்தில் பாதுகாப்பையும் மீறி 35 வயது உள்ள இளைஞர் ஒருவர் தூக்கில்தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதன் காரணமாக முருகன் சன்னிதானம் மூடப்பட்டு தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளது. தைப்பூச திருவிழா நடைபெற உள்ள நிலையில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழனி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.