Home Featured கலையுலகம் அனிருத் கோலாலம்பூரில்தான் இருக்கிறார்!

அனிருத் கோலாலம்பூரில்தான் இருக்கிறார்!

840
0
SHARE
Ad

str2_lo_2509_p17_anirudh ravichanderகோலாலம்பூர் – ‘பீப்’ பாடல் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் சிம்புவுக்கு சென்னை நீதிமன்றம் முன் பிணை (முன் ஜாமீன்) அளித்துள்ளதைத் தொடர்ந்து, பீப் பாடலுக்கு இசையமைத்தவர் என்ற முறையில், இந்த விவகாரம் தொடர்பில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் மற்றொருவரான இசையமைப்பாளர் அனிருத் எங்கிருக்கின்றார் என்பது இதுவரை தெரியாமல் இருந்து வந்தது.

அனிருத் கனடாவில் இருக்கின்றார் என்றும், மலேசியாவில் இருக்கின்றார் என்றும் அவ்வப்போது ஆரூடங்கள் வெளியிடப்பட்டு வந்தன.

இந்நிலையில், நேற்று நள்ளிரவுக்குப் பின்னர் மின்னல் வானொலியின் விளம்பரதாரர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பஹாருடின் டிராவல் அண்ட் டூர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோஸ்ரீ ஏ.பஹாருடின், தான் இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மானையும், அனிருத்தையும் கோலாலம்பூரில் எதிர்பாராத விதமாக சந்தித்ததாகக் கூறினார் என வாசகர் ஒருவர் செல்லியலிடம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதிலிருந்து அனிருத் கோலாலம்பூரில்தான் இருக்கின்றார் என்பது உறுதியாகியுள்ளது.