Home Featured வணிகம் ஃபிளிப்கார்ட் தலைமைச் செயல் அதிகாரி திடீர் மாற்றம்!

ஃபிளிப்கார்ட் தலைமைச் செயல் அதிகாரி திடீர் மாற்றம்!

528
0
SHARE
Ad

flipமும்பை – இந்தியாவின் மிகப் பெரிய இணைய வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்டின், தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த சச்சின் பன்சால் மாற்றப்பட்டு, இணை நிறுவனரான பின்னி பன்சால் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த 2007-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஃபிளிப்கார்ட், இன்று இந்திய அளவில் மிகப் பெரும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. அமேசான், ஸ்னாப்டீல் என பல்வேறு நிறுவனங்கள் போட்டியில் இருந்தாலும், ஃபிளிப்கார்டின் மதிப்பு தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் தான், பின்னி பன்சால் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஃபிளிப்கார்ட் நிறுவனம் இலாபகரமாக இயங்கி வரும் நிலையில், தலைமைச் செயல் அதிகாரி மாற்றப்பட்டுள்ளதற்கான காரணம் இதுவரைத் தெரியவில்லை.