Home Featured வணிகம் ஃபிளிப்கார்ட்டில் விற்பனை செய்யப்படுவது திருட்டு செல்பேசிகளா?

ஃபிளிப்கார்ட்டில் விற்பனை செய்யப்படுவது திருட்டு செல்பேசிகளா?

535
0
SHARE
Ad

flipkartபுது டெல்லி – இந்தியாவின் முன்னணி இணைய வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட் நிர்வாகத்திற்கு, சமீபத்தில் டெல்லி காவல்துறையிடமிருந்து எச்சரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த எச்சரிக்கை கடிதத்தில், குறிப்பிட்ட ஒரு தனியார் நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்பேசிகளை, 6 சமூக விரோதிகள் கடத்தி அதனை ஃபிளிப்கார்ட் மூலம் விற்பனை செய்துள்ளனர். ஒரு பாதுகாப்பான இணைய தளம் மூலம் இத்தகைய செயல்களை செய்ய ஃபிளிப்கார்ட் எப்படி அனுமதி அளித்தது என்று அந்நிறுவனத்திடம் காவல்துறை விளக்கம் கேட்டுள்ளது.

காவல்துறையின் இந்த குற்றச்சாட்டு ஃபிளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 200-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த திருட்டு செல்பேசிகள் இந்த தளத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும், இந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட்ட காவல்துறை அந்த ஆறு குற்றவாளிகளையும் கைது செய்துள்ளது. தற்போது அவர்கள் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விட, ஃபிளிப்கார்ட் நிறுவனம் எப்படி இத்தைகைய திருடர்கள் மிக எளிதாக விற்பனை செய்யும் அளவிற்கு பாதுகாப்பற்றதாக உள்ளது என்ற சர்ச்சை எழுந்துள்ளது.