அனைத்துலக பத்திரிக்கை ஒன்றின் நிருபர் ஒருவர் ஜெனிபரிடம், “ஆஸ்கார் விருதுக்கு உங்களை எப்படி பார்க்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் இந்தக் கேள்வியைக் கேட்கையில் தனது கையில் உள்ள போனைப் பார்த்தபடி கேட்டுள்ளார்.
அதைக் கவனித்த ஜெனிபர், “உங்கள் போனிற்குப் பின்னாலேயே ஒட்டுமொத்த வாழ்க்கையையும் வாழ இயலாது சகோதரா. நீங்கள் அப்படி செய்யக் கூடாது. நீங்கள் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
உடனடியாக மன்னிப்பு கேட்ட அந்த நிருபர் மீண்டும், “ஆஸ்கார் இரவுக்கு உங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?” என்று கேட்க, மீண்டும் ஜெனிபர், “நாம் இப்போது கோல்டன் குளோப்சில் இருக்கின்றோம். நீங்கள் உங்களது போனை வைத்தால், அதைத் தெரிந்து கொள்வீர்கள்” என்று பதிலளித்துள்ளார்.
உண்மையில், ஆங்கிலத்தை முதல் மொழியாகக் கொண்டிராத அந்த நிருபர், தனது போனில் மொழிபெயர்த்திருக்கும் கேள்விகளைப் பார்த்த படி தான் கேட்க வேண்டிய சூழ்நிலையில் இருந்துள்ளார்.
அதைப் புரிந்து கொள்ளாத ஜெனிபர், நிருபரைப் புண்படுத்தும் படியாகப் பேசியது அங்கிருக்கும் மற்ற செய்தியாளர்களிடமிருந்து கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
https://www.youtube.com/watch?v=dKubY7Tjwc0