மஇகா தேசியத் தலைவரும், சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் சுப்ரா இது குறித்து மேலும் கூறுகையில், நஜிப் இந்த விவகாரத்தை அமைச்சரவையுடன் கலந்து பேசி, மலேசியா ஆண் பெண் இரு பாலரையும் சமமாக மதிக்கும் பன்மை சமூகம் என்ற வகையில் இவ்விவகாரத்தைத் தீர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
“கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விவகாரத்தை எழுப்பினேன். இந்த விவகாரம் குறித்து சட்டத்துறைத் தலைவரிடம் பேசும் படி பிரதமர் நஜிப், மூன்று அமைச்சர்களுக்கு உத்தரவிட்டார்”
“பிள்ளைகள் மதமாற்ற விவகாரத்தில், சட்டங்கள் ஒருதலைப் பட்சமாக இருப்பதைப் பாதுகாக்க அதில் சில திருத்தங்களைக் கொண்டு வருவது குறித்த சாத்தியக் கூறுகளை ஆராய்வது முதன்மையானது என்பதையும் பிரதமர் ஏற்றுக் கொண்டார்” என்று டாக்டர் சுப்ரா, இன்று சிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளியைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.