Home Featured இந்தியா சபரிமலைக்குள் பெண்களை மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது – உச்ச நீதிமன்றம் கண்டிப்பு!

சபரிமலைக்குள் பெண்களை மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது – உச்ச நீதிமன்றம் கண்டிப்பு!

710
0
SHARE
Ad

Sabarimal1புதுடில்லி – சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில்  பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ”சபரிமலையில் பெண்களை ஏன் அனுமதிக்கக் கூடாது? கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது” என கோயில் நிர்வாகத்திற்கு கேள்வி எழுப்பி உள்ளது.

மேலும், இவ்வழக்கில் எவ்வித உத்தரவும் பிறப்பிக்காமல் நோட்டீஸ் அனுப்பி, வழக்கை வரும் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது