Home Featured கலையுலகம் நடிகர் சங்கக் கட்டிட பூஜை – முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்!

நடிகர் சங்கக் கட்டிட பூஜை – முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்!

672
0
SHARE
Ad

nadigar-sangamசென்னை – தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைமை மாற்றத்திற்குக் காரணமான நடிகர் சங்கத்தின் கட்டிடத் துவக்க விழா விரைவில் நடைபெற இருக்கின்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள, முதல்வர் ஜெயலலிதா சம்மதம் தெரிவித்துள்ளதாக சங்கத்தின் துணைத் தலைவர் கருணாஸ் இன்று அறிவித்துள்ளார்.

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் நாசர் 1 கோடியே 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை முதல்வர் ஜெயலலிதாவிடம் இன்று வழங்கினார்.

அதன் பின்னர், முதல்வர் ஜெயலலிதாவுடனான சந்திப்பு குறித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் கருணாஸ் கூறுகையில், “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் வெள்ள நிவாரண நிதியாக 1 கோடியே 10 லட்சம் ரூபாயை முதல்வரிடம் நிதியாக அளித்துள்ளோம். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட துவக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று முதல்வரிடம் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தோம்.”

#TamilSchoolmychoice

“அதே கோரிக்கையை இந்த முறை தலைவர் நாசரும், பொது செயலாளர் விஷாலும் கேட்டார்கள். முதல்வரும் நிச்சயமாக பூமி பூஜையில் வந்து கலந்து கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்” என்று கூறியுள்ளார்.