Home Featured உலகம் விமானத்தின் தரையிறங்கும் கியரில் சடலம் – பாரிஸ் விமான நிலையத்தில் பரபரப்பு!

விமானத்தின் தரையிறங்கும் கியரில் சடலம் – பாரிஸ் விமான நிலையத்தில் பரபரப்பு!

544
0
SHARE
Ad

landinggear_3150181bபாபிக்னி (பிரான்ஸ்) – பிரேசிலில் இருந்து பாரிஸ் ஒர்லி விமான நிலையத்திற்கு வந்த ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்றின் தரையிறங்கும் கியரில் (landing gear) நேற்று திங்கட்கிழமை ஆணின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் சா பாலோவில் இருந்து பாரிசின் சார்லஸ் டெ காவ்லே அனைத்துலக விமான நிலையத்திற்குப் பறந்திருந்த அந்த போயிங் 777 இரக விமானம், பராமரிப்பு செய்வதற்காக ஓர்லிக்கு வந்திருந்தது.

இந்நிலையில், கண்டறியப்பட்ட சடலம், பாரிஸ் தடயவியல் நிறுவனத்திற்கு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

#TamilSchoolmychoice

கடந்த 2013-ம் ஆண்டு, இதே போன்ற சம்பவம் சார்லஸ் டே காவ்லே விமான நிலையத்தில் நிகழ்ந்தது. விமானம் ஒன்றின் தரையிறங்கும் கியரில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.