Home Featured நாடு “தற்கொலைப்படையாக செயல்பட்டது மலேசியர்கள் தான் என்பது இன்னும் உறுதியாகவில்லை” – காலிட் தகவல்

“தற்கொலைப்படையாக செயல்பட்டது மலேசியர்கள் தான் என்பது இன்னும் உறுதியாகவில்லை” – காலிட் தகவல்

578
0
SHARE
Ad

Khalid Abu Bakarகோலாலம்பூர் – சிரியாவிலும், ஈராக்கிலும் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி 33 பேர் பலியானதற்குக் காரணம் இரு மலேசியர்கள் தான் என்பது இன்னும் உறுதியாகவில்லை என்றும், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காகக் காத்திருப்பதாகவும் தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து புக்கிட் அம்மானில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய காலிட், “ஒருவேளை அவர்கள் மலேசியர்களின் அடையாளத்தைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் நாங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காகக் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மத்தியக் கிழக்கில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மலேசியர்களைத் தாங்கள் தீவிரமாக கவனித்து வருவதாகவும் காலிட் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“அங்கு மலேசியர்கள் இருக்கிறார்கள் என்று தெரியும். அவர்கள் தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈடுபடுவதற்கு முன்பே எங்களுக்குத் தகவல் வந்திருக்கும். நாங்கள் கவனித்து வருகின்றோம்” என்று காலிட் தெரிவித்துள்ளார்.

தற்கொலைப் படைத்தாக்குதலில் மலேசியர்கள் ஈடுபட்டதாக நேற்று வெளிவந்த செய்தியை அறிந்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தனது பேஸ்புக் பக்கத்தில், அதிர்ச்சியையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.