Home Featured உலகம் வெங்காயத்தைத் தேய்த்துக் கொண்டு அழுதாரா ஒபாமா? – ஃபாக்ஸ் நியூஸ் கேலி!

வெங்காயத்தைத் தேய்த்துக் கொண்டு அழுதாரா ஒபாமா? – ஃபாக்ஸ் நியூஸ் கேலி!

622
0
SHARE
Ad

obama2நியூ யார்க் – அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கிக் கலாச்சாரத்தை தடுப்பதற்கு சட்டம் இயற்றுவது தொடர்பாக, அந்நாட்டு அதிபர் ஒபாமா சமீபத்தில் மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது, 3 ஆண்டுகளுக்கு முன்பு 20 பள்ளிக் குழந்தைகள் கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்த ஒபாமா, அதனை தடுக்க முடியாமல் போனது குறித்து உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்தார்.

ஒபாமாவின் அழுகை உலக அளவில் எதிரொலித்தது. பல்வேறு பத்திரிக்கைகளும் அதனை தலைப்புச் செய்தியாக வெளியிட்டன.

இந்நிலையில், இது தொடர்பாக ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி நிறுவனம் சமீபத்தில் நடத்திய விவாத மேடையில், பங்கேற்பாளர் ஒருவர், “ஒபாமாவின் அழுகை நம்ப முடியாததாக இருந்தது. நான் அங்கு இருந்திருந்ததால், மேடையில் வெங்காயம் இருந்ததா? என ஆராய்ந்து இருப்பேன்.  என்னைப் பொருத்தவரை அதனை நான் நம்பவில்லை. அங்கு ஒபாமா விருதுமேடை ஆக்கிவிட்டார்” என்று அவர் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.