Home Featured வணிகம் டிபிபிஏ வணிக ஒப்பந்தம் குறித்த விளக்கங்களைப் பெற வேண்டுமா?

டிபிபிஏ வணிக ஒப்பந்தம் குறித்த விளக்கங்களைப் பெற வேண்டுமா?

546
0
SHARE
Ad

TPPA-BOOKLET-MITIகோலாலம்பூர் – டிரான்ஸ் பசிபிக் பார்ட்னர்ஷிப் ஒப்பந்தம் எனப்படும் டிபிபிஏ வணிக ஒப்பந்தம், நமது நாட்டில் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, இந்த ஒப்பந்தத்திற்கு எதிரான குரல்களும் பல முனைகளில் இருந்தும் உரக்க ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் அனைத்துலக வாணிபத் தொழில் துறை அமைச்சு இந்த ஒப்பந்தம் குறித்த எளிமையான விளக்கங்கள் அடங்கிய கையடக்கப் பதிப்பு ஒன்றை மின்னூல் வடிவத்தில் வெளியிட்டுள்ளது.

92 பக்கங்களைக் கொண்டு தேசிய மொழியில் வெளியிடப்பட்டுள்ள இந்த மின்னூலை கீழ்க்காணும் இணைப்பில் இலவசமாகப் பெறலாம்.

#TamilSchoolmychoice

http://fta.miti.gov.my/miti-fta/resources/MITI_TPPA.pdf.