Home நாடு அஸ்மின் அலி பதவி விலக 100,000 -க்கும் மேற்பட்டோர் கையெழுத்து கோரிக்கை

அஸ்மின் அலி பதவி விலக 100,000 -க்கும் மேற்பட்டோர் கையெழுத்து கோரிக்கை

732
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : அனைத்துலக வாணிப, தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி தனது அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு கோரி இணையத்தளம் வழி நடத்தப்பட்ட கையெழுத்துத் திரட்டலில் இதுவரை சுமார் 100,000-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

தனது அமைச்சருக்கான கடமையில் இருந்து அஸ்மின் அலி தவறி விட்டார் என்றும் அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையோடும் நேற்று முதல் இந்த கையெழுத்து வேட்டை தொடங்கப்பட்டது.

நேற்று முதல் டுவிட்டர் தளங்களில் அதிகம் பகிரப்படும், பின்தொடரப்படும் சர்ச்சை விவகாரமாகவும் அஸ்மின் அலி விவகாரம் உருவெடுத்துள்ளது.

#TamilSchoolmychoice

முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருக்கும் இந்த காலகட்டத்தில் பல பெரிய தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அஸ்மின் அலி அனுமதி தந்தார் என்ற சர்ச்சையைத் தொடர்ந்து அவர் மீதான கண்டனங்கள் எழுந்துள்ளன. அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன.

இதுகுறித்து முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் அஸ்மின் அலிக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருந்தார். அஸ்மின் அலி தனித்து இயங்குவதற்கு அனுமதிக்கக் கூடாது காரணம் அவரைச் சுற்றி பணக்காரத் தொழிலதிபர்கள் சூழ்ந்துள்ளனர் என நஜிப் தெரிவித்திருந்தார்.

தனது முடிவுகள் குறித்து தற்காத்துப் பேசிய அஸ்மின் அலி, தொழிற்சாலைகள் இயங்குவதற்கு மேலும் 15 அமைச்சுகள் அனுமதி வழங்கும் நடைமுறையில் ஈடுபட்டன என்றும் தெரிவித்திருக்கிறார்.