Home Featured நாடு துணையமைச்சர் கமலநாதனுக்கு கெடா மாநில டத்தோ விருது!

துணையமைச்சர் கமலநாதனுக்கு கெடா மாநில டத்தோ விருது!

907
0
SHARE
Ad

P-Kamalanathanகோலாலம்பூர் – மஇகா மத்திய செயலவை உறுப்பினரும், கல்வி துணையமைச்சருமான பி.கமலநாதனுக்கு கெடா மாநிலத்தின் டத்தோ விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனவரி 17ஆம் தேதி கெடா மாநில சுல்தானும், நடப்பு மாமன்னருமான சுல்தான்  துவாங்கு அல்ஹாஜ் அப்துல் ஹாலிம் முவாசாம் ஷா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு கமலநாதனுக்கு டிபிஎம்கே (DPMK) என்ற அடைமொழியைக் கொண்ட டத்தோ பட்டம் வழங்கப்படுகின்றது.

கமலநாதன் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமாவார்.