குறிப்பாக எம்ஜிஆர், அசைக்க முடியாத முதல்வராக, யாராலும் தேர்தலில் தோல்வியடைய வைக்க முடியாத அரசியல் தலைவராக கோலோச்சிய தமிழகத்தில் இன்று அவரது பிறந்த நாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது.
சென்னை கடற்கரையில் உள்ள அவரது சமாதியில் இன்று ஆயிரக்கணக்கில் அவரது இரசிகர்களும், அதிமுக தொண்டர்களும் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இன்றும் தமிழக மக்களின் இதயங்களில் வீற்றிருக்கும் எம்ஜிஆரின் சுலோகத்தை முன்னிறுத்தி, அதிமுக தொண்டர்களுக்கு உற்சாகமூட்டும் வரையில் ஜெயலலிதாவின் உரை இன்று அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
1987ஆம் ஆண்டில் மறைந்தாலும், இன்றும் எம்ஜிஆர் பெயர் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத அளவுக்கு உலா வருகின்றது. மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு ஜெயலலிதாவுக்கு முக்கிய பங்காற்றும் எனவும் கருதப்படுகின்றது.