Home Featured வணிகம் தொழில்முனைவோருக்காக ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் – அடுத்த கட்டப் பாய்ச்சலில் இந்தியா!

தொழில்முனைவோருக்காக ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் – அடுத்த கட்டப் பாய்ச்சலில் இந்தியா!

743
0
SHARE
Ad

Launch of Startup India action planபுது டெல்லி – இந்தியாவில் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் பொருட்டு பிரதமர் மோடி, ‘ஸ்டார்ட்-அப்’ (Start-Up) இந்தியா திட்டத்தை நேற்று அறிமுகப்படுத்தி உள்ளார். இந்திய இளைஞர்களின் கனவுத் திட்டமாகக் கருத்தப்படும் ஸ்டார்ட்-அப் திட்டத்தில், தொழில் துவங்கிய முதல் 3 ஆண்டுகளுக்கு எவ்வித ஆய்வும் நடத்தப்படாது. அதேபோல், காப்புரிமை பெறுவதிலும் விதிகள் தளர்த்தப்படுகின்றன. குறிப்பாக, காப்புரிமை பட்டயத்தை பதிவு செய்வதற்கான கட்டணங்கள் 80 சதவீதம் வரை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, தொழில் துவங்கி முதல் 3 ஆண்டுகளுக்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. அதேபோல், மூலதன ஆதாயம் (Capital) மீதான வரியை செலுத்துவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொழில் துவங்குவதற்கு உதவுவதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த திட்டம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “புகழ் பெறுவதற்காகவும், பணம் சம்பாதிப்பதற்காகவும் இந்த திட்டம் துவங்கப்படவில்லை. இந்த திட்டத்தின் நோக்கம் அதற்கும் அப்பாற்பட்டது. இந்தியாவின் வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்துவது தான் முக்கிய காரணி. அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு ஒரு செயலியில் கிடைத்துவிடுகிறது. இதனை நான் உணர்ந்துள்ளேன். நானும் நரேந்திரமோடி செயலி என ஒன்றை வைத்துள்ளேன். இதில் முக்கிய தகவல்கள் மக்களுக்கு பகிரப்பட்டுள்ளது. உங்களின் அனுபவங்களை இதில் பகிர்ந்து கொள்ளலாம். விவசாயிகளுக்கு உதவும் வகையிலான செயலிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.”

#TamilSchoolmychoice

“தொழிலதிபர்கள் தங்களின் கருத்துக்களையும், எண்ணங்களையும் கூறலாம். இங்கு கூடியுள்ள நீங்கள் தான், நான் என்ன செய்யக் கூடாது என கூற வேண்டும். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் மாற்றங்களும், தீர்வுகளும் கண்டுள்ளோம். தொழிலதிபர்கள் எடுக்கும் துணிச்சலான முடிவு தான் அவர்கள் வெற்றி பெற உதவுகிறது. இது தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.”

“ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்திற்கு, அதிக நிர்வாகம் தான் முக்கிய பங்காக இருக்கும். நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த அரசு உறுதி எடுத்துக் கொண்டுள்ளது. இந்த திட்டம், இந்தியாவில் உள்ள இளைஞர்களின் திறமையைக் கொண்டாடும். துணிச்சலான முயற்சிகள் தான் ஸ்டார்ட் ஆப் திட்டத்திற்கு வெற்றி கிடைக்க வழி வகுக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.