Home Featured கலையுலகம் ஜல்லிக்கட்டு தடை: இறைச்சிக்கு விற்கப்பட்டதா ‘விருமாண்டி’ காளை?

ஜல்லிக்கட்டு தடை: இறைச்சிக்கு விற்கப்பட்டதா ‘விருமாண்டி’ காளை?

679
0
SHARE
Ad

Virumandiகோவை – ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டிற்கென்றே பிரத்யேகமாக வளர்க்கப்பட்ட காளைகளை, அதன் உரிமையாளர்கள் வேறு வழி இன்றி கேரளாவில் அடிமாட்டுக்கு விற்பனை செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், கமலஹாசனின் ‘விருமாண்டி’ படத்தில் நடித்த காளையும் அதன் உரிமையாளரால் கேராளவிற்கு இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அறிந்த வெள்ளிங்கிரி கோசாலை நிர்வாகம், அக்காளையோடு சேர்த்து 100-க்கும் மேற்பட்ட காளைகளை மீட்டு வந்து தற்போது தங்களது பராமரிப்பில் வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

வெள்ளிங்கிரி கோசாலை நிர்வாகத்தின் கீழ் தற்போது 1400 மாடுகள் இருப்பதாகவும், அவற்றில் 206 மாடுகள் ஜல்லிக்கட்டில் இடம்பெற்ற மாடுகள் என்றும் விகடன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.