Home Featured நாடு நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக இராணுவம் களமிறங்கத் தயார் – ஹிஷாமுடின் அறிவிப்பு!

நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக இராணுவம் களமிறங்கத் தயார் – ஹிஷாமுடின் அறிவிப்பு!

613
0
SHARE
Ad

hishamuddinகோலாலம்பூர் – தேவை ஏற்பட்டால், தேசிய பாதுகாப்பு சபை, மலேசிய இராணுவத்தைக் களமிறக்கி, மலேசியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்தும் என தற்காப்புத்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

டாயிஸ் தீவிரவாத அமைப்பு தாக்குதல் தொடர்பான பிரச்சனையில் மிகக் கவனமாக கையாள வேண்டும் என்றும், அதற்கு கட்டாயமாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தலைமையிலான தேசிய பாதுகாப்பு சபையைச் சேர்ந்த இராணவ அதிகாரிகளின் உதவி தேவை என்றும் ஹிஷாமுடின் தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice

நேற்று தற்காப்புத்துறையின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஹிஷாமுடின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேசிய நீலக் கடல் வியூகத்தின் அடிப்படையில், ஏற்கனவே இராணுவத்தினர் மலேசியக் காவல்துறையுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர். எனவே இராணுவமும், காவல்துறையும் இணைந்து பணியாற்றுவது ஒரு பிரச்சனையே அல்ல”

“என்றாலும், டாயிஸ் அச்சுறுத்தலுக்கு எதிராக இராணுவத்தினரைக் களமிறக்குவது குறித்து நாம் முடிவு எடுக்க முடியாது. அதை தேசியப் பாதுகாப்பு சபை தான் முடிவு செய்ய முடியும். நாட்டின் சட்டங்களின் அடிப்படையில் மேலிடத்தின் உத்தரவிற்காகக் காத்திருப்போம்” என்று ஹிஷாமுடின் கூறியுள்ளார்.

கடந்த வாரம், இந்தோனேசியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, நாட்டில் பல பகுதிகளிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதனிடையே, கடந்த வாரம் கோலாலம்பூரில் ஐஎஸ் இயக்கத்தில் தொடர்புடைய மலேசியர் ஒருவரைக் கைது செய்த காவல்துறை, அந்நபர் மூலம் கோலாலம்பூரில் முக்கிய இடங்களில் தீவிரவாதிகள் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததைக் கண்டறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.