Home Featured தொழில் நுட்பம் பெண்களே உஷார் – உங்களின் பேஸ்புக் புகைப்படங்களும் ஆபாசத்திற்குப் பயன்படுத்தப்படலாம்!

பெண்களே உஷார் – உங்களின் பேஸ்புக் புகைப்படங்களும் ஆபாசத்திற்குப் பயன்படுத்தப்படலாம்!

606
0
SHARE
Ad

facebookகோலாலம்பூர் – சமீபத்தில் பிரபல ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரை ஒன்று தீவிர பேஸ்புக் பயனர்களை சற்றே கலக்கத்தில் ஆழ்த்தில் உள்ளது. குறிப்பாக பேஸ்புக்கில் நொடிக்கு ஒருமுறை தம்படம் (செல்ஃபி) பதிவேற்றும் பெண்களுக்கு எச்சரிக்கையாகவே அமைந்துள்ளது.

பேஸ்புக்கில் இருக்கும் மிகப் பெரிய குறைப்பாடாகக் கருதப்படுவது, யாருடைய கணக்குகளில் இருந்தும் புகைப்படங்களையும் யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பதாகும். இந்த ஒரு விசயத்தை பயன்படுத்திக் கொண்டுள்ள சைபர் குற்றவாளிகள் ஆபாச வலைத்தளங்களை பிரபலப்படுத்த, பேஸ்புக்கில் இருக்கும் பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

இதற்காக இயங்கும் குழுக்கள், பேஸ்புக்கில் இருக்கும் அழகான பெண்களின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து அவற்றை தங்களுடன் தொடர்பில் இருக்கும் மற்றொரு குழுவிற்கு அனுப்புகிறது. அந்தக் குழு குறிப்பிட்ட அந்த பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக ‘மார்ப்’ (Morph) செய்து தங்களின் ஆபாச வலைத்தளங்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறது.

#TamilSchoolmychoice

இப்படியாக சிக்கும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகம் இருப்பதாக பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக சைபர் குற்றங்கள் நிபுணர் கிஸ்லே சவுத்ரி கூறுகையில், “இன்று நாம் சந்திக்கும் மிக அச்சுறுத்தலான சைபர் குற்றங்களில் ஒன்று தான் பேஸ்புக்கில் இருக்கும் பெண்களின் புகைப்படங்கள் ஆபாச வலைத்தளங்களுக்கு பயன்படுத்தப்படுவது தான். கவரும் விதமாக இருக்கும் பெண்களின் புகைப்படங்கள் தான் இத்தகைய குற்றங்களுக்கு பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக நாங்கள் மிகத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.