Home இயக்கங்கள் தேன்கூடு கவிதை நூல் வெளியீடு

தேன்கூடு கவிதை நூல் வெளியீடு

2179
0
SHARE
Ad

samy-veluகோலாலம்பூர், மார்ச்.14- எதிர்வரும் மார்ச் 20.3.2013 புதன்கிழமை மாலை 6 மணிக்கு கோலாலம்பூர் மஇகா தலைமையக நேதாஜி மண்டபத்தில் கவிஞர் செ.சீனி நைனா முகமதுவின் தேன் கூடு கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

கிழக்காசிய நாடுகளுக்கான மலேசிய சிறப்பு தூதர் டத்தோஸ்ரீ உத்தாமா ச. சாமிவேலு தலைமை தாங்கி நூல் வெளியீடு செய்யவுள்ள இந்நிகழ்வில் கூட்டரசு வளாக நகர்ப்புற நல்வாழ்த் துறைத் துணையமைச்சர் டத்தோ மு. சரவணன் வரவேற்புரையாற்றுவார்.

dato-saraமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன், இஸ்லாமிய கல்வி வாரியத்தலைவர்  டத்தோஸ்ரீ முகமது இக்பால் ஆகியோர் வாழ்த்துரை வழங்க, மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவர் டாக்டர் ரெ.கார்த்திகேசு நூலறிமுகம் செய்ய, நூலாசிரியர் கவிஞர் செ.சீனி நைனா முகமது ஏற்புரை வழங்குவார்.

#TamilSchoolmychoice

மலேசிய கண்ணதாசன் அறவாரியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் ‘தேன்கூடு ’ நூல் வெளியீட்டு விழாவிற்குப் பொது மக்களும் இலக்கிய ஆர்வலர்களும் திரண்டு வந்து ஆதரவு தருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.