Home Featured நாடு செலாயாங் மார்க்கெட் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 75 பேர் கைது!

செலாயாங் மார்க்கெட் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 75 பேர் கைது!

577
0
SHARE
Ad

Selayangகோலாலம்பூர் – செலாயாங் காய்கறி மொத்த விற்பனை மையத்தில் (செலாயாங் மார்க்கெட்) கடந்த வாரம் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து செந்துல் ஓசிபிடி துணை ஆணையர் ஆர்.முனுசாமி கூறுகையில், அந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகின்றது. அதுவரையில் எந்த ஒரு பழிவாங்கல் சம்பவமும் நடக்காது என நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

“இந்தச் சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் யாரும் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம். குறிப்பாக இந்தச் சம்பவத்தில் 5 அல்லது 6 இந்தியர்கள் பலியானதாக பரப்பப்படும் வதந்தியால் மேலும் பிரச்சனை தான் அதிகரிக்கும்”

#TamilSchoolmychoice

“செலாயாங் காய்கறி மொத்த விற்பனை மையத்தில் ஆயுதம் கொண்டு வந்த வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரைக் காவல்துறை கைது செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கு எல்லா நேரங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன”

“மேலும் அங்கு வன்முறை வெடிக்காமல் தடுக்க, அங்கு பாதுகாப்புப் பணியில் இரண்டு காவல்துறையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்” என்று முனுசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 13-ம் தேதி, இரவு 10 மணியளவில் இரண்டு காரி வந்த மர்ம நபர்கள் காரில் இருந்தபடி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 34 வயதான நபரும், அவரது 2 வயது குழந்தையும் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 20 வயதான நபரை மறுநாள் பத்துமலை அருகே காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனிடையே, இந்தச் சம்பவம் இந்தியர்களுக்கும், மியான்மார் நாட்டவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு என்று சில தரப்பினர் கூறி வருவதையும் காவல்துறை மறுத்துள்ளது.

Saravanan - MIC -முன்னதாக, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன், ஏசிபி முனுசாமி மற்றும் சில மஇகா தலைவர்கள் ஆகியோர் செலாயாங் மார்கெட் பகுதிக்கு சென்று அங்குள்ள வர்த்தகர்களிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தினர்.

அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு பற்றியும், வெளிநாட்டினரின் நடவடிக்கைகள் பற்றியும் விசாரணை செய்யப்பட்டது.

அங்கு சட்டவிரோதமாக காய்கறி விற்பனை செய்யும் வியாபாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் படி, குடிநுழைவுத்துறையினரை டத்தோ சரவணன் வலியுறுத்தியுள்ளார்.