Home Featured உலகம் பாகிஸ்தான் பெஷாவரில் குண்டு வெடிப்பு – 10 பேர் கொல்லப்பட்டனர்!

பாகிஸ்தான் பெஷாவரில் குண்டு வெடிப்பு – 10 பேர் கொல்லப்பட்டனர்!

506
0
SHARE
Ad

இஸ்லாமாபாத் – வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் என்ற நகரில் உள்ள ஒரு பாதுகாப்பு சோதனை தடுப்புச் சாவடியில் வெடிகுண்டு வெடித்ததில் 10 பேர் கொல்லப்பட்டதோடு, 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

Ten dead in bombing on Pakistan-Afghan highwayபாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான் நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில், ஜம்ருட் என்ற இடத்தில் காவல் துறையினரும், துணை இராணுவத்தினரும் ஏற்படுத்தியிருந்த ஒரு தடுப்புச் சாவடிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் இந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது.

கொல்லப்பட்டவர்களில், பாதுகாப்பு அதிகாரிகள், ஒரு பெண், ஒரு குழந்தை ஆகியோரும் அடங்குவர் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

Ten dead in bombing on Pakistan-Afghan highwayவெடிகுண்டுத் தாக்குதலில் சிதைந்து கிடக்கும் மோட்டார் சைக்கிள்கள்…

இதுவரை 32 பேர் காயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

நேற்று தென் மேற்கு நகரான குவெட்டாவில் சாலையோரத்தில் தாலிபான்கள் வைத்த வெடிகுண்டு வெடித்ததில் 6 இராணுவத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரண்டாவது சம்பவமாக இன்றைய வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

இந்த வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.