Home Featured நாடு “என்னுடைய தலைமைத்துவம் வேண்டுமா? என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்” – முக்ரிஸ்

“என்னுடைய தலைமைத்துவம் வேண்டுமா? என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்” – முக்ரிஸ்

627
0
SHARE
Ad

mukrizகோலாலம்பூர் – கெடா மந்திரி பெசாராக யார் பதவி வகிக்க வேண்டும்? என்பதை மக்களே தீர்மானிக்கட்டும் என அம்மாநிலத்தின் நடப்பு மந்திரி பெசாரான டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் தலைவரான தன்னுடைய செயல்பாடுகளையும், திறமைகளையும் மக்களே மதிப்பிடட்டும் என்றும் முக்ரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

“13-வது பொதுத்தேர்தலுக்குப் பிறகு கெடாவில் பாரிசான் தன்னுடைய சக்தியை திரும்பப் பெற்ற முதல் நாளில் இருந்து என்னுடைய செயல்பாடுகளை மக்கள் மதிப்பிடட்டும்” என்று நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

முக்ரிஸ் மகாதீரின் தலைமைத்துவத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், அவர் பதவி விலக வேண்டும் என்றும் நேற்று கெடா அம்னோ தலைவர்கள் சார்பில் பிரதமருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, முக்ரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்காக சேவை செய்யவே தான் பதவி வகிப்பதாக முக்ரிஸ் தெரிவித்துள்ளார்.

மந்திரி பெசாராகத் தான் பதவி வகிப்பது மக்களுக்கும், கெடா சுல்தானுக்கும் மிக முக்கியம் என்பதால், பிரதமரே தன்னை பரிந்துரைத்ததாகவும் முக்ரிஸ் தெரிவித்துள்ளார்.