Home Featured நாடு புதிய தேர்தல் ஆணையராக ஹாசிம் அப்துல்லா பதவி ஏற்கிறார்!

புதிய தேர்தல் ஆணையராக ஹாசிம் அப்துல்லா பதவி ஏற்கிறார்!

676
0
SHARE
Ad

Hashim Abdullahகோலாலம்பூர் – இந்த மாதத்தோடு பணி ஓய்வு பெறவுள்ள தேர்தல் ஆணையர் அப்துல் அஜிஸ் மொகமட் யூசோப்புக்குப் பதிலாக புதிய தேர்தல் ஆணையராக ஹாசிம் அப்துல்லா பதவி ஏற்கவுள்ளார்.

பெர்னாமா வெளியிட்டுள்ள தகவலின் படி, வரும் ஜனவரி 24-ம் தேதி முதல் ஹாசிம் பணியில் அமர்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்து வரும் ஹாசிம், கடந்த 2014-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் பதவி ஏற்றார். அதற்கு முன்னதாக விவசாயம் மற்றும் வேளாண் அமைச்சில் பொதுச்செயலாளராக பதவி வகித்தார்.

#TamilSchoolmychoice

Tan-Sri-Abdul-Aziz-Mohd-Yusof2கூட்டரசு அரசியலமைப்பு ஆர்டிகில் 114(3)-ன் படி, தேர்தல் ஆணையராகப் பதவி வகிப்பவர்கள் 66 வயதானால் கட்டாய ஓய்வு பெறுவதன் அடிப்படையில், அப்துல் அஜிஸ் இந்த மாதத்தோடு ஓய்வு பெறுகின்றார்.

அஜிஸ் கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர்31-ம் தேதி, தேர்தல் ஆணையராகப் பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.