Home Featured கலையுலகம் சந்தானத்தின் அடுத்த படம் “சர்வர் சுந்தரம்” – முதல் பார்வை வெளியானது!

சந்தானத்தின் அடுத்த படம் “சர்வர் சுந்தரம்” – முதல் பார்வை வெளியானது!

652
0
SHARE
Ad

சென்னை – தொலைக்காட்சித் தொடரில் காலடி எடுத்து வைத்து, அதே சூட்டோடு திரைப்படங்களிலும் ஒரு சுற்று வந்து முத்திரை பதித்தார் சந்தானம். இப்போதோ, கதாநாயகனாக மட்டும்தான் நடிப்பேன் என புதிய பாதை போட்டுக் கொண்டு அதில் வெற்றியும் பெற்று வருகின்றார்.

அந்த வகையில் அவர் அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தின் பெயர் ‘சர்வர் சுந்தரம்’ என அறிவிக்கப்பட்டு, அதற்கான முதல் பார்வை விளம்பரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Server Sundram-Santhanam-movie poster

#TamilSchoolmychoice

தமிழ்த் திரைப்பட இரசிகர்களால் மறக்க முடியாத படம் 1965இல் வெளிவந்த சர்வர் சுந்தரம். மறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் படைக்கப்பட்டு மேடை நாடகமாக நடிகர் நாகேஷ் நடித்து வெற்றி பெற்ற கதையை, பின்னர் தமிழ்த் திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏவி.எம்.தயாரித்தார்கள்.

பிரபல இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில், கே.பாலசந்தர் கதை வசனம் எழுத, நகைச்சுவை பாத்திரங்களில் மட்டும் நடித்து வந்த நாகேஷ் கதாநாயகனாக நடிக்க, கூடவே, முத்துராமன், கே.ஆர்.விஜயா போன்ற முன்னணி நடிகர்களும் இணைந்த அந்தப் படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

கே.பாலசந்தருக்கு தமிழ் திரையுலகில் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க பாதை அமைத்துக் கொடுத்ததும் சர்வர் சுந்தரம் படம்தான்.

அதே பெயரில் நவீன சமையல்காரன் தோற்றத்தில் சந்தானம் தோன்றுவதால், இந்தப் படம் குறித்த பரபரப்புகள் இப்போதே பற்றிக் கொள்ளத் தொடங்கியுள்ளன.