Home Featured நாடு பத்துமலை தைப்பூச திருவிழா – படக் காட்சிகள்!

பத்துமலை தைப்பூச திருவிழா – படக் காட்சிகள்!

1161
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று பத்துமலையில் நடைபெற்ற தைப்பூசத் திருநாள் விழாவில் இந்திய சமூகத்தின் தலைவர்களும், மஇகா தலைவர்களும், மலேசியாவுக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தியும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Thaipusam-2016-MIC leaders-1பத்துமலைத் திருத்தலத்தில் கூட்டத்தினரோடு திருவிழாவில் கலந்து கொண்ட மஇகா முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு, துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன்…..

Thaipusam-2016-scene-night நேற்றிரவு தைப்பூசம் திருவிழா காண திரண்டிருந்த கூட்டமும் – பத்துமலை வளாகம் ஒளிவெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த காட்சியும்….

#TamilSchoolmychoice

Thaipusam-2016-MIC leaders-2பத்துமலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் ஆலய வளாகத்தில் சாமிவேலு, சரவணன், இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி ஆகியோருக்கு மாலை மரியாதை வழங்கப்படுகின்றது….

Thaipusam-2016-MIC leaders-3பத்துமலைத் திருவிழாவுக்கு வருகை தந்த பிரமுகர்கள் இடமிருந்து – இந்தியத் தூதர் திருமூர்த்தி, கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் லோகாபாலமோகன், துணையமைச்சர் சரவணன், சாமிவேலு, ஆலயத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா, டாக்டர் சுப்ரா, டத்தின்ஸ்ரீ சுப்ரமணியம், புவான்ஸ்ரீ மல்லிகா நடராஜா, ஆலய அறங்காவலர் ந.சிவகுமார், மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ தேவமணி, ஆலய செயற்குழு உறுப்பினர் சுரேஷ்…

Thaipusam-2016-evening-24 jan-

நேற்று மாலை தைப்பூசத் திருவிழாவில் திரண்டிருந்த பக்தர்களில் ஒரு பகுதியினர்….

Thaipusam-2016-MIC leaders-4

பத்துமலைத் தைப்பூசத் திருவிழாவுக்கு வருகை தந்த துணையமைச்சர் எம்.சரவணன், ஆலயத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா தம்பதியர், சாமிவேலு, துணையமைச்சர் லோகபாலமோகன், இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி….

Thaipusam-2016-Batu Caves-kavadi

பத்துமலை தைப்பூசத்தின் சிறப்பு அம்சம் காவடிகள். நேற்று முழுவதும் வண்ணமயமான காவடிகள் பத்துமலை முருகனின் குகைக் கோவிலை நோக்கி வரிசையாக சென்று கொண்டே இருந்தன. நேற்று மாலை எடுத்து வரப்பட்ட ஒரு காவடி வண்ண மயமான ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, தூக்கி வரப்பட்ட காட்சி…