அவரது பேட்டியில், “மக்கள் விரும்பினால், திருவாரூர் சட்டசபை தொகுதியில், நான் மீண்டும் போட்டியிடுவேன். சட்டசபை தேர்தலில், திமுக-விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.கோவில் கருவறையில் முதல்வர் படம் வைத்திருப்பது, மூட நம்பிக்கைகளில் ஒன்று. திமுகவில் தயாராகி வரும் தேர்தல் அறிக்கை, ஜனநாயகத்தை மையப்படுத்தியதாக இருக்கும். தேர்தலில் கூட்டணி என்பது வெறுக்கத்தக்கது அல்ல; வரவேற்கத்தக்கது” என்று கூறியுள்ளார்.
கருணாநிதி, திருவாரூரில் போட்டியிடுவது குறித்த அறிவிப்பினை வெளியிடலாம் என நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.