கோலாலம்பூர் – இம்மாதம் 22 மற்றும் 23 ம் திகதிகளில் மலாயாப்பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும், உலகத் தமிழ் மற்றும் சோதிடவியல் ஆய்வு மையமும் இணைந்து இரண்டாவது அனைத்துலக சோதிடவியல் மாநாட்டை மலாயாப்பல்கலைக்கழக கலைப்புலத்தில் (ஆர்ட்ஸ் ஃபேக்கல்டி) மிகச்சிறப்பாக நடத்தியது. இதற்கு மலேசிய சிகரம் இயக்கம் பேராதரவு நல்கியது.
மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த்திய ஏற்பாட்டுக் குழுத் தலைவர் முனைவர் கோவி.சிவபாலன் “சோதிடம் ஒரு புரிதல்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார் …
மாநாட்டை பேராசிரியர் முனைவர் சிவபாலன் (படம்) அவர்களும், முனைவர் மணிமாறன் மற்றும் அவர் தம் ஏற்பாட்டுக் குழுவினரும் மிகச்சிறப்பாக நடத்தினர்.
ஆய்வியல் துறை பேராசிரியர்கள் முனைவர் இராசேந்திரன், முனைவர் வே. சபாபதி, முனைவர் இராசேந்திரம் ஆகியோர் இம்மாநாடு சிறப்பாக அமைய உறுதுணையாக இருந்ததாக மாநாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் தெரிவித்தார்.
உலகத் தமிழ் மற்றும் சோதிட ஆய்வு மையத்தின் தலைவர் மகாலெட்சுமியின் உரை…
முதல் நாள் நிகழ்வில் வரவேற்புரையை ஏற்பாட்டுக்குழுத்தலைவர் முனைவர் சிவபாலன் ஆற்ற சிறப்புரையை உலகத்தமிழ் மற்றும் சோதிடவியல் ஆய்வு மையத் தலைவி மகாலஷ்மி நிகழ்த்தினார். இந்திய ஆய்வியல் துறைத்தலைவர் முனைவர் மோகன்தாஸ் அவர்கள் திறப்புரை ஆற்றி மாநாட்டைத் துவக்கி வைத்தார்.
சோதிடத்தில் இயற்கையின் சீற்றம்
முதல் பொழிவில் தமிழகத்து சோதிடர் நெல்லை வசந்தன் ‘சோதிடத்தில் இயற்கையின் சீற்றம்’ என்பது பற்றி உரையாற்றினார். எந்த கிரகங்களின் அமைப்பின் போது இயற்கையின் சீற்றங்கள் இதுவரை நேர்ந்துள்ளது என ஆய்வுப்பூர்வமாக சுட்டிக்காட்டினார்.
மலாயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறைத் தலைவர் முனைவர் மோகனதாஸ் உரையாற்றுகின்றார்…
தொடர்ந்து ‘சோதிடத்தில் திருமணவாழ்க்கை’ என்ற தலைப்பில் சோதிடர். முருகு. பாலமுருகன் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தார்.
தொடர்ந்த அமர்வுகளில் திரு.மயில்சாமி சோதிடவியலின் தோற்றம் பற்றியும் திரு. சாமி சுப்ரமணியம் சோதிடவியலில் மருத்துவம் குறித்தும், நம் நாட்டு சோதிடர் துறவி “வழிகாட்டும் சோதிடக்கலை வழி தவறலாமா” என்பது பற்றியும் அலசினார்கள்.
திருமதி இராஜலெட்சுமி “வளம் தரும் வாஸ்து” பற்றி சோதிடத்தில் வாஸ்துவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். புலவர் நவமணியோ ஒரு படி மேலே அனைவரும் ரசிக்கும்படியும் ஆதாரப்பூர்வமாகவும் “வாஸ்து – வாஸ்த்தவம்” என்ற தமது ஆய்வில் சரியான வாஸ்து, வாழ்க்கையை எப்படி மாற்றிக்காட்டும் என்றும், சரியில்லா வாஸ்து ஏற்படுத்திய விளைவுகளையும் கூறி, அனைவருக்கும் பயன் தரும் குறிப்புகளையும் தந்தார்.
மாநாட்டில் நூல் வெளியிடப்படுகின்றது – இடமிருந்து முனைவர் இராஜேந்திரன், மகாலெட்சுமி, ‘சிகரம்’ வீரமோகன், சிவபாலன், மலாயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறைத் தலைவர் மோகன்தாஸ், தென்காசி ஜி.மாடசாமி…
திரு சிவகோதண்டம் அவர்கள் கல்வி, தொழில் அமைய கிரக நிலை எப்படி இருக்கும் என்றும், திரு முருகேசன் பரிகாரங்களும் வாழ்க்கையும் என்பது பற்றியும் விளக்கமளித்தனர்.
சாதகம் கணிப்பதில் மலேசிய நேரக்கணக்கு முறையை ரமேஷ் ஆச்சார்யா தமது உரையின் கருப்பொருளாக்கினார்.
மாடசாமியின் “களத்திரத்தில் செவ்வாய்”
முதல் நாள் மதிய உணவுக்குப்பின் உள்ள அமர்வுகளில் தென்காசி சோதிடர் மாடசாமி, இன்று மிகவும் முக்கியமாகப் பலரும் கருதும் “களத்திரத்தில் செவ்வாய்” என்பது பற்றி மிகவும் பயனுள்ள தமது ஆய்வுப்பூர்வமான, அனுபவப்பூர்வமான உரையை ஆற்றினார்.
மாநாட்டில் கலந்து கொண்ட பிரமுகர்கள்…
மதிய அமர்வில் சோதிடர் பாலகிருஷ்ணன் “பஞ்ச பட்சி சாஸ்திரம்” பற்றியும், திரு. சங்கர் “தேவ பிரசன்னம்” ஆகியவற்றைப் பற்றியும் சுருக்கமாக நல்லதொரு விளக்கம் அளித்தனர்.
முனைவர் நடராஜன் சோதிடம் மூலம் மரணம் பற்றி முன்கூட்டியே பலன் உணர்த்துவதையும், தனது அனுபவத்தையும் நகைச்சுவையாக எடுத்துரைத்தார்.
தொடர்ந்த அமர்வுகளில் திரு. சபரி கணேஷ், திருமதி. மலர்விழி, திருமதி ஞானரதம் ஆகியோர் தங்கள் ஆய்வுகளை சமர்ப்பிக்க, லஷ்மிப்பிரியன் சோதிடர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி கருத்துரைத்தார்.
“அள்ள அள்ளப் பணம்” என்ற தலைப்பில் உரையாற்றிய சதயம் மீனாட்சி சுந்தரம்…
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக முதல் நாள் நிறைவு பேச்சாளராக களம் இறங்கிய சதயம் மீனாட்சி சுந்தரம் “அள்ள அள்ள பணம்” என்ற தலைப்பில் பல சுவாரசியமான தகவல்களைத் தந்து எல்லோர் மனதையும் அள்ளிச் சென்றார்.
இரண்டாம் நாள் நிகழ்வுகள் – சோதிடக் கலை ஒரு புரிதல்”
மறுநாள் சனிக்கிழமை முதல் உரையை “இசை சோதிடம்” பற்றி திருமதி மீனாட்சி அழகப்பன் ஆரம்பித்து வைக்க, இந்திய ஆய்வியல் துறையின் பேராசிரியரும் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான முனைவர் கோவி. சிவபாலன் “சோதிடக்கலை ஒரு புரிதல்” என்ற தலைப்பில் நம் நாட்டுப் பேராசிரியர்களும், தமிழ் நாட்டுக்காரர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக மிகச் சிறந்ததொரு உரையாற்றினார்.
“சோதிடமும் பிரபஞ்சமும்” என்ற தலைப்பில் உரையாற்றிய மலாயாப் பல்கலைக் கழகத்தின் முனைவர் மணிமாறன்…
அவரைத்தொடர்ந்து அதே துறையைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் மணிமாறன் அவர்களும் “சோதிடமும் பிரபஞ்சமும்” என்ற தமது ஆய்வுரையை நிகழ்த்தினார். அண்டத்தில் உள்ள கோள்கள் எவ்வாறு தனி மனிதனை ஆட்படுத்தமுடியும் என விஞ்ஞானப்பூர்வமாக ஒளிப்படம் மூலம் காட்சிப்படுத்தி சோதிட நம்பிக்கை இல்லாதவர்களையும் மலைக்க வைத்தார்.
சோதிட பட்டிமன்றம்
இம்மாநாட்டிற்கு மணிமகுடம் சேர்க்கும் விதமாக சோதிட பூஷன் மணிமுத்துசாமி தலைமையில் பட்டிமன்றம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
“இளவயது திருமணத்திற்கு முக்கியமானது குருபலமா? அல்லது சுக்கிர பலமா” என்ற தலைப்பில் சோதிடர்கள் மிகச் சிறப்பான, சுவாரசியமான வாதங்களை முன் வைத்தனர். பேராளர்களுக்கு இது மிகவும் பயனளித்தது என்பதை கேள்வி நேரத்தின்போது கலந்து கொண்ட பேராளர்கள் தொடுத்த கேள்விகளிலிருந்து அறிய முடிந்தது.
மாநாட்டுக்கு ஆதரவு அளித்த ‘மலேசிய சிகரம்’ இயக்கத்தின் தலைவர் வீரமோகன் வழங்கிய வாழ்த்துரை…
இந்த மாநாட்டில், சுமார் 200 இந்திய மற்றும் மலேசியப் பேராளர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். நன்றியுரை ஆற்றிய மாநாட்டு ஏற்பாட்டுத் குழுத் தலைவர் முனைவர் கோவி.சிவபாலன் அவர்கள் இம்மாநாடு செவ்வனே நடந்ததற்கும், மிகப்பெரிய வெற்றிக்கும் இரு நாட்டு பேராளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
எதிர்காலத்தில் சோதிடத்தில் முனைவர் பட்டம் பெற இந்திய ஆய்வியல் துறை இந்திய பல்கலைக்கழகத்தின் துணையோடு ஆவன செய்யும் என்றும் உறுதியளித்தார். இது சோதிடத்தில் மேற்கல்வியை தொடர எண்ணுவோருக்கு மகிழ்வானதொரு தகவலாகும்.
“வழிகாட்டும் சோதிடக் கலை வழி தவறலாமா” என்ற தலைப்பில் உரையாற்றிய நமது நாட்டு சோதிட வல்லுநர் துறவி….
திருமதி மகாலஷ்மி தமது ஏற்புரையில் சோதிடக்கலையை பாடமாக வைத்திருக்கும் எந்தப் பல்கலைக்கழகமும் தங்களோடு இணைந்து இம்மாநாட்டை ஏற்று நடத்தாத நிலையில் மலாயாப்பல்கலைக்கழகம் இம்மாநாட்டை ஏற்று நடத்தியதற்காக தமது நன்றியை உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்.
இந்த சோதிட மாநாடு கலந்து கொண்ட அனைவருக்கும் சோதிடம் பற்றிய பல்வேறு தகவல்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்வாக அமைந்தது. பேராளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் மாநாடு நிறைவேறியது.
இந்த மாநாட்டில் சோதிடர்கள் சிலர் எழுதிய நூல்கள் சிலவும் வெளியீடு கண்டது.
“நலம் தரும் நட்சத்திர விருட்சங்கள்” என்ற தலைப்பில் தென்காசி ஜி.மாடசாமி எழுதியிருந்த நூல் அத்தகைய நூல்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
சோதிடம் எனும் நமது பாரம்பரிய கலாச்சார-விஞ்ஞான அம்சத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும் முயற்சியில், அதன் வளர்ச்சியில், இந்த மாநாட்டின் மூலம் இந்திய ஆய்வியல் துறை ஆற்றியுள்ள பங்கு வரலாற்றில் மறுக்க, மறைக்க முடியாத மிக முக்கிய பதிவாகும்.
-சா.விக்னேஸ்வரி
முதல் நாள்நிகழ்வில் வரவேற்புரையை ———- ஆற்ற சிறப்புரையை———ஆற்றினார். மாநாட்டை —திறப்புரை ஆற்றி துவக்கி வைத்தார்.
முதல் பொழிவில் சோதிடர் நெல்லை வசந்தன் சோதிடத்தில் இயற்கையின் சீற்றம் என்பது பற்றி எந்த கிரகங்களின் அமைப்பின் போது இயற்கையின் சீற்றங்கள் இதுவரை நேர்ந்துள்ளது என ஆய்வுப்பூர்வமாக சுட்டிக்காட்டினார். தொடர்ந்து சோதிடத்தில் திருமணவாழ்க்கை என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தார்.
தொடர்ந்த அமர்வுகளில் திரு.மயில்சாமி சோதிடவியலின் தோற்றம் பற்றியும் திரு. சாமி சுப்ரமணியம் சோதிடவியலில் மருத்துவம் குறித்தும் நம் நாட்டு சோதிடர் துறவி வழிகாட்டும் சோதிடக்கலை வழி தவறலாமா என்பது பற்றியும் அலசினார்கள்., திருமதி.இராஜலெட்சுமி வளம் தரும் வாஸ்து பற்றி சோதிடத்தில் வாஸ்துவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். புலவர் நவமணியோ ஒரு படி மேலே அனைவரும் ரசிக்கும்படியும் ஆதாரப்பூர்வமாகவும் வாஸ்து வாஸ்த்தவம் என்ற தமது ஆய்வில் சரியான வாஸ்து வாழ்பக்கையை எப்படி மாற்றிக்காட்டும் என்றும், சரியில்லா வாஸ்து ஏற்படுத்திய விளைவுகளையும் அனைவருக்கும் பயன் தரும் குறிப்புகளையும் தந்தார்.
திரு. சிவகோதண்டம் அவர்கள் கல்வி, தொழில் அமைய கிரக நிலை எப்படி இருக்கும் என்றும், திரு.முருகேசன் பரிகாரங்களும் வாழ்க்கையும் என்ற கட்டுரையை சமர்ப்பித்தார். சாதகம் கணிப்பதில் மலேசிய நேரக்கணக்கு முறையை ரமேஷ் ஆச்சார்யா தமது கருப்பொருளாக்கினார்.
உணவுக்குப்பின் உள்ள அமர்வுகளில் சோதிடர் மாடசாமி அவர்கள் இன்று மிகவும் முக்கியமாக பலரும் கருதும் களத்திரத்தில் செவ்வாய் என்பது பற்றி மிகவும் பயனுள்ள தமது ஆய்வுப்பூர்வமான, அனுபவப்பூர்வமான பொழிவை ஆற்றினார்.
மதிய அமர்வில் சோதிடர் பாலகிருஷ்ணன் பஞ்ச பட்சி சாஸ்த்திரம் பற்றியும், திரு. சங்கர் தேவ பிரசன்னம் ஆகியவற்றைப்பற்றி சுருக்கமாக நல்லதொரு விளக்கம் அளித்தனர்.
முனைவர் நடராஜன் சோதிடம் மூலம் மரணம் பற்றி முன்கூட்டியே பலன் உணர்த்துதையும், தனது அனுபவத்தையும் நகைச்சுவையாக எடுத்துரைத்தார்.
தொடர்ந்த அமர்வுகளில் திரு. சபரி கணேஷ், திருமதி. மலர்விழி, திருமதி ஞானரதம் ஆகியோர் தங்கள் ஆய்வுகளை சமர்ப்பிக்க, லஷ்மிப்பிரியன் சோதிடர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி கருத்துரைத்தார்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக முதல் நாள் நிறைவு பேச்சாளராக களம் இறங்கிய சதயம் மீனாட்சி சுந்தரம் அவர்கள்’ அள்ள அள்ள பணம் என்ற தலைப்பில் பல சவாரசியமான தகவல்களைத் தந்து எல்லோர் மனதையும் அள்ளிச் சென்றார்.
மறுநாள் சனிக்கிழமை முதல் பொழிவை இசை சோதிடம் பற்றி திருமதி மீனாட்சி அழகப்பன் ஆரம்பித்து வைக்க, இந்திய ஆய்வியல் துறை மூத்த பேராசிரியரும் ஏற்பாட்டுக்குழுத்தரைவரமான முனைவர் கோவி. சிவபாலன் அவர்கள் சோதிடக்கலை ஓரு புரிதல் என்ற தலைப்பில் நம் நாட்டுப் பேராசிரியர்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக மிகச் சிறந்ததொரு உரையாற்றினார்.
அவரைத்தொடர்ந்து அதே துறையைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் மணிமாறன் அவர்களும்