Home நிகழ்வுகள் மலேசியாவின் ‘நியூ அவதார்ஸ்’ குழுவினர் பங்கேற்கும் மானாட மயிலாட நிகழ்ச்சி

மலேசியாவின் ‘நியூ அவதார்ஸ்’ குழுவினர் பங்கேற்கும் மானாட மயிலாட நிகழ்ச்சி

1018
0
SHARE
Ad

manadaகோலாலம்பூர்,ஜன.12- உலகில் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் அதிக அளவில் விரும்பி ரசிக்கும் மானிட மயிலாட நிகழ்வின் 8ஆவது சுற்றில் நம் நாட்டை சேர்ந்த ஆட்டம் நூறு வகை புகழ் ‘நியூ அவதார்ஸ்’  குழுவிற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது.

சென்ற ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற மானாட மயிலாட 7இல் சிறப்பான திறமையை வெளிபடுத்திய இக்குழுவினருக்கு இவ்வருடப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.

நாளை பிற்பகல் 2 மணியளவில் ஆஸ்ரோ வானவில் இந்நிகழ்ச்சி  ஒளிபரப்படும். இக்குழுவை பிரதிநிதித்து விக்கி, தீபா ஆகியோர் கலந்து கொள்வர் என்று குழுவின் ஆசிரியர் செ.சுகன் கூறினார்.

#TamilSchoolmychoice

தமிழ் நாட்டின் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மானாட மயிலாட நடனப் போட்டி அடிப்படையில் நடத்தப்பட்டு பிரபலமான  நிகழ்ச்சியாகும்.