தைபே – தைவானில் கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வழக்கத்திற்கு மாறான அளவில் பனிப்பொழி ஏற்பட்டுள்ளது. இதுவரை 85 பேர் பலியாகி உள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. அண்டை நாடான தென் கொரியாவிலும் ஏறக்குறைய 60,000 சுற்றுலாப்பயணிகள் பனிப் புயலில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக தைவான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தாங்க முடியாத பனிப்பொழிவால் மக்கள் ஹைப்போதெர்மியா மற்றும் இதய நோய்களில் சிக்கித் தவிக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை மட்டும் 4 டிகிரி செல்சியஸ் அளவிற்கு பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 44 வருடங்களில் இப்படியான பனிப் பொழிவு ஏற்பட்டதில்லை” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, பனிப் பொழிவு காரணமாக ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்து மற்றும் இரயில் போக்குவரத்தும் முடங்கி மக்களின் வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.