கடந்த டிசம்பர் மாதம், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள், சகாயம் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என பேரணி நடத்தினர். இந்தப் பேரணி அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. என்றாலும் அரசியலுக்கு வருவது குறித்து சகாயம் தொடர்ந்து மௌனம் காத்து வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் அரசியலில் ஈடுபடுவது குறித்து சகாயம் காணொளி ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அந்தக் காணொளியில், இளைஞர்கள் தேர்தல் சார்ந்த அரசியலை கையில் எடுப்பதை விட, சமூகம் சார்ந்த அரசியலில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஊழல் இல்லாத அரசியல் உருவாக வேண்டுமானால், ஊழல் இல்லாத சமூகத்தை முதலில் உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரின் அந்தக் காணொளியைக் கீழே காண்க: