Home Featured நாடு நாடாளுமன்றத்தில் டிபிபிஏ (TPPA) தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது!

நாடாளுமன்றத்தில் டிபிபிஏ (TPPA) தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது!

653
0
SHARE
Ad

EPA/FAZRY ISMAIL

கோலாலம்பூர் – டிபிபிஏ வணிக ஒப்பந்தத்தில் (Trans-Pacific Partnership Agreement -TPPA) மலேசியா பங்கேற்பதற்கான தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் அமைச்சர் டத்தோஸ்ரீ முஸ்தபா மொகமட் நாடாளுமன்றத்தில் இன்று அந்தத் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

#TamilSchoolmychoice

டிபிபிஏ-வில் பங்கேற்கும் அரசாங்கத்தின் முடிவிற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த டிபிபிஏ என்பது அமெரிக்கா மற்றும் உலகின் மிகப் பெரிய சக்திகளின் காலணித்துவ ஆதிக்கம் என்று கூறப்படுவதை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மறுத்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் இணைவதால் நாட்டிற்கும், மக்களுக்கும் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட நன்மைகள் ஏற்படும் என்பதை ஆராய்ந்த பிறகே அந்த ஒப்பந்தத்தில் இணையும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் நஜிப் தெரிவித்துள்ளார்.

“அமெரிக்கா, கனடா, மெக்சிகோ மற்றும் பெரு ஆகிய டிபிபிஏ நாடுகளில் மலேசியர்களுக்கு புதிய சந்தைகளை உருவாக்க இந்த ஒப்பந்தம் பல நன்மைகளை செய்கிறது” என்றும் நஜிப் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.