நட்பு ஊடகங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்தப் போட்டி பெரும்பாலும் பயனர்களுக்கு சாதகமாகவே அமைந்து விடுகிறது. இதனை உணர்ந்து தான் பேஸ்புக் நிறுவனம் உடனடியாக வாட்சாப் நிறுவனத்தை வாங்கியது. தற்போது முன்னிலையில் இருக்கும் வாட்சாப்பும், பேஸ்புக்கும் அடுத்த கட்ட மேம்பாடுகளையும், மாற்றங்களையும் செய்வதற்கு தயாராகி வருகின்றன.
தனித்தனி செயலிகளாக செயல்படும் இவை ஒன்றிணைந்து செயல்பட்டால் எப்படி இருக்கும் என்பதே அடுத்த கட்ட மாற்றமாகும். இரு செயலிகளிலும் தகவல்கள், ஆவணங்கள், காணொளிகள், புகைப்படங்கள் என அனைத்தையும் பகிர்ந்து கொள்ளலாம் என்பது நாம் அறிந்த ஒன்றே. புதிய மாற்றத்தின் படி, வாட்சாப்பில் நாம் பகிரும் அனைத்தையும் பேஸ்புக்கிலும் தன்னிச்சையாக பகிரும் வசதி அடுத்த கட்டமாக மேம்படுத்தப்பட இருக்கிறது.