Home Featured நாடு தாய்லாந்தில் கிடைத்தது எம்எச்370 பாகம் அல்ல – லியாவ் உறுதி!

தாய்லாந்தில் கிடைத்தது எம்எச்370 பாகம் அல்ல – லியாவ் உறுதி!

816
0
SHARE
Ad

thailandகோலாலம்பூர் – தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள விமானத்தின் பாகம், மாயமான எம்எச்370 விமானத்தின் பாகம் கிடையாது என்பதை மலேசியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் உறுதிப்படுத்தியுள்ளார்.

கண்டெடுக்கப்பட்ட விமானப் பாகத்தின் குறியீட்டு எண்களை மலேசியாவில் இருந்து அனுப்பப்பட்ட விசாரணைக் குழு ஆராய்ந்ததில், அது போயிங் 777 விமானத்தின் பாகங்கள் கிடையாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் லியாவ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

போயிங் 777 விமானத்தின் பாகங்களில் இருக்கும் குறியீட்டு எண்களின் பட்டியலுடன், அந்த விமானப் பாகத்தின் குறியீட்டு எண்கள் ஒத்துப் போகவில்லை என்பதை அடிப்படையாக வைத்து அது எம்எச்370 விமானத்தின் பாகம் கிடையாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த விசாரணைக்கு பெரிதும் உதவிய தாய்லாந்து போக்குவரத்து அமைச்சிற்கும், உள்நாட்டு விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் லியாவ் தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

தாய்லாந்தின் நக்ஹோன் சி தம்மராட் மாகாணத்தின் கிராமப் பகுதி ஒன்றில், 2 மீட்டர் அகலமும், 3 மீட்டர் நீளமும் கொண்ட உலோகப் பொருள் ஒன்று கடந்த 23-ம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த கிராமவாசிகளால் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.