Home Featured நாடு சவுதி அரசரிடமிருந்து தான் நஜிப்புக்கு நன்கொடை வந்தது – உறுதிப்படுத்தியது பிபிசி!

சவுதி அரசரிடமிருந்து தான் நஜிப்புக்கு நன்கொடை வந்தது – உறுதிப்படுத்தியது பிபிசி!

782
0
SHARE
Ad

131019023705_saudis_king_abdullah_512x288_afp_nocreditகோலாலம்பூர் – சவுதியில் இருந்து தான் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு 681 மில்லியன் அமெரிக்க டாலர் (2.08 பில்லியன் ரிங்கிட்) நிதி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதை சவுதி அரேபியா, பிரபல செய்தி நிறுவனமான பிபிசி -யிடம் உறுதிப்படுத்தியுள்ளது.

மறைந்த சவுதி அரேபியா அரசர் கிங் அப்துல்லா தனது தனிப்பட்ட நிதி மற்றும் மாநில நிதியில் இருந்து அத்தொகையை அனுப்பியுள்ளதாக அந்நாட்டைச் சேர்ந்த முக்கிய புள்ளியிடமிருந்து தகவலைப் பெற்றுள்ளது பிபிசி செய்தி நிறுவனம்.

கடந்த 2013-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலுக்காக பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு அந்நிதி வழங்கப்பட்டதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

எனினும், சவுதி அரேபியாவின் நிதியமைச்சு மற்றும் வெளியுறவு அமைச்சைச் சேர்ந்த தலைவர்கள், அந்நிதி பட்டுவாடா செய்யப்பட்டது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளதாக ‘த வால் ஸ்ட்ரீட் ஜார்னல்’ பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.