பெர்லின் – ஊழல் மிகக் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் கடந்த முறையை ஒப்பிடுகையில், ஒரு இடம் பின்தங்கி சிங்கப்பூர் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் மலேசியாவிற்கு 54-வது இடமும், இந்தியாவிற்கு 76-வது இடமும் கிடைத்துள்ளது.
ஊழல் மிகுந்துள்ள நாடுகளின் பட்டியலை டிரான்ஸ்பிரன்சி இண்டர்நேஷனல் (Transparency International) என்ற அமைப்பு ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியலை அந்த அமைப்பு சமீபத்தில் வெளியிட்டது.
இதில் ஊழல் விவகாரங்கள் மிகவும் குறைவாக உள்ள நாடாக டென்மார்க் மீண்டும் முதல் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து பின்லாந்து, சுவீடன், நியூசிலாந்து, நெதர்லாந்து, நார்வே ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
ஊழல்கள் மலிந்த நாடுகள் பட்டியலில் சோமாலியா, வடகொரியா மற்றும் ஆப்கன் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊழல்கள் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியல் பின்வருமாறு:
- டென்மார்க்
- பின்லாந்து
- சுவீடன்
- நியூசிலாந்து
- நெதர்லாந்து
- நார்வே
- சுவிட்சர்லாந்து
- சிங்கப்பூர்
- கனடா
- ஜெர்மனி, லக்சம்பெர்க் மற்றும் இங்கிலாந்து