Home Featured நாடு பெசுட் கடற்கரையில் விமானப் பாகம் கண்டுபிடிப்பு!

பெசுட் கடற்கரையில் விமானப் பாகம் கண்டுபிடிப்பு!

1126
0
SHARE
Ad

Besutபெசுட் – கம்போங் பெந்திங் லின்தாங் கடற்கரை அருகே நேற்று 2 மீட்டர் அளவுடைய விமானப் பாகம் ஒன்றை அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கண்டறிந்துள்ளார்.

நேற்று பிற்பகல் 12 மணியளவில் அந்த விமானப் பாகத்தைக் கண்டறிந்த அக்கிராமவாசி ஒருவர் பிற்பகல் 3.45 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார் என பெசுட் காவல்துறைக் கண்காணிப்பாளர் காலெட் சே லா கூறியுள்ளார்.

“வேறு ஒரு இடத்திலிருந்து அந்த விமானப் பாகம் அடித்து வரப்பட்டிருக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ள காலெட், இது குறித்து கோலாலம்பூரிலுள்ள உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலாகாவிற்கு தகவல் தெரிவித்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த வாரம் தாய்லாந்தில் விமானப் பாகம் ஒன்று கரை ஒதுங்கியது. அது மாயமான எம்எச்370 -ன் பாகமாக இருக்கலாம் என நம்பப்பட்டது.

எனினும், அதை ஆய்வு செய்த அதிகாரிகள் அப்பாகம் எம்எச்370-ன் பாகம் கிடையாது என்பது உறுதி செய்தனர்.