Home Featured கலையுலகம் “குஷ்பு என் அக்கா..அவங்களுக்கு முத்தம் கொடுத்தா தப்பா?” – மாதவன்

“குஷ்பு என் அக்கா..அவங்களுக்கு முத்தம் கொடுத்தா தப்பா?” – மாதவன்

842
0
SHARE
Ad

madhavan-kushbooசென்னை – குஷ்பு தொகுத்து வழங்கும் தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலந்து கொண்ட நடிகர் மாதவன், அவருக்கு முத்தம் கொடுத்து, ஊடகங்களின் சர்ச்சைப் பக்கங்களுக்கு சிறிது நாட்கள் தீனி போட்டார். அந்த சம்பவத்தை வறுத்தெடுத்த இணையவாசிகள், குஷ்பு குறித்து பல்வேறு மீமீக்களை உருவாக்கினர்.

இந்நிலையில், பிரபல ஊடகம் ஒன்றிற்கு நடிகர் மாதவன் சமீபத்தில் பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில், குஷ்புவிற்கு அவர் முத்தம் கொடுத்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் கூறுகையில், “நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா ஒரே துறைல வேலை செஞ்சோம்..ஃப்ரண்ட்ஸ், இதெல்லாம் நான் சொல்ல மாட்டேன். அவங்க என் அக்கா. இப்போ சொல்லுங்க அந்த முத்தம் தப்பா? சரியா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.