Home Featured நாடு இன்று பிப்ரவரி 1 முதல் பெட்ரோல் விலைகள் குறைக்கப்பட்டன!

இன்று பிப்ரவரி 1 முதல் பெட்ரோல் விலைகள் குறைக்கப்பட்டன!

671
0
SHARE
Ad

petrolபுத்ரா ஜெயா – உலகம் எங்கும் எண்ணெய் விலைகள் வீழ்ச்சி அடைந்து வருவதால் இன்று பிப்ரவரி 1 முதல் மலேசியாவிலும், பெட்ரோல், டீசல் எண்ணெய் விலைகளை அரசாங்கம் குறைத்துள்ளது.

ரோன் 95 (RON95) ரக பெட்ரோல் விலை இன்று முதல் லிட்டருக்கு ரிங்கிட் 1.75 ஆக இருக்கும். இது ஜனவரி மாத விலையைவிட 10 காசுகள் குறைவாகும்.

ரோன் 97 ரக (RON97)  பெட்ரோல் ரிங்கிட் 2.05 ஆக இருந்து வரும். இது கடந்த மாத விலையை விட 20 காசுகள் குறைவாகும்.

#TamilSchoolmychoice

டீசல் எண்ணெய் விலை ரிங்கிட் 1.35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த மாத விலையை விட 25 காசுகள் குறைவாகும்.

ஈரோ 5 (Euro 5) ரக டீசலின் விலை 15 காசுகள் குறைக்கப்பட்டு ரிங்கிட் 1.45 விலையில் விற்கப்படும்.