Home Featured உலகம் “அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு-அனைவரும் வாருங்கள்”- ஏற்பாட்டாளர் வெற்றிச் செல்வி அழைப்பு

“அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு-அனைவரும் வாருங்கள்”- ஏற்பாட்டாளர் வெற்றிச் செல்வி அழைப்பு

1490
0
SHARE
Ad

Vetri Selvi-press ocnf-muthu-elanthamilபெட்டாலிங் ஜெயா – புலம்பெயர்ந்து கலிபோர்னியாவில் வாழும் குழந்தைகளுக்கு தமிழ் மொழியையும் தமிழ் பண்பாட்டையும் கற்றுத்தர ஆரம்பிக்கப்பட்ட, கலிபோர்னியா தமிழ்க் கழகம் இப்பொழுது உலகம் முழுதும் பரவி, உலகத் தமிழ்க் கல்விக் கழகம் (இண்டர்நேஷனல் தமிழ் அகாடமி)  எனச் செயல்பட்டு வருகிறது.

இக்கழகம் 2012-இல் முதலாவது தமிழ்க் கல்வி மாநாட்டினை மிகச்சிறப்பாக அமெரிக்காவில் நடத்தியது. உலகத் தமிழ்க் கல்விக் கழகம் புலம் பெயர்ந்தோர்க்கான தமிழ்க் கல்வியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் பொருட்டு இரண்டாவது உலகத் தமிழ்க் கல்வி மாநாட்டை மே 27, 2016-இல் அமெரிக்காவில் நடத்துகிறது.

Vetri Selvi-USA-International Tamil Academyதிருமதி வெற்றிச் செல்வி இராஜமாணிக்கம்…

#TamilSchoolmychoice

இந்த மாநாட்டின் நோக்கங்கள், ஏற்பாடுகள் குறித்து விளக்கவும், இம்மாநாட்டில் கலந்து கொள்ள மலேசியத் தமிழர்களுக்கு நேரடியாக அழைப்பு விடுக்கும் நோக்கிலும், மலேசியாவுக்கு வருகை தந்துள்ள உலகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் தலைவரான வெற்றிச் செல்வி இராஜமாணிக்கம் (படம்) நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

உலகத் தமிழ்க் கல்விக் கழகம் புலம் பெயர்ந்தோர்க்கான தமிழ்க் கல்வியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வாய்ப்புகளை எப்பொழுதும் ஆராய்ந்து வருகிறது என்றும், தமிழ்க் கல்வியை மேம்படுத்த பல்வேறு வழிகளை ஆராயவும், மாணவர்களின் கற்கும் அனுபவத்தை சிறக்கச் செய்யவும் இம்மாநாடு வழிவகுக்கும் எனவும் வெற்றிச் செல்வி இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

உலகெங்கும் உள்ள தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆசிரியர்கள், தமிழ் மொழிக்கான கருவிகள் உருவாக்குபவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளார்கள். மொழிக் கல்வி பற்றி அறிய இது மிகச் சிறந்த வாய்ப்பாகும் . இம்மாநாடு கட்டுரை படைப்பு, ஆசிரியர் பட்டறை, தமிழ்ப் போட்டிகள், பண்பாட்டு நிகழ்ச்சிகள் என பல பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது.

Vetri Selvi-Tamil Academy-USA-press conf-muthu-elanthamilநேற்றைய பத்திரிக்கையாளர் மாநாட்டில் முத்து நெடுமாறன், வெற்றிச் செல்வி, இளந்தமிழ்….

இம்மாநாடு அதன் பயனை அடையவும், வெற்றி பெறவும், மலேசிய கல்வியாளர்களையும், தமிழ்க்கல்வி ஆர்வலர்களின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்க வேண்டுமெனவும் வெற்றிச் செல்வி கேட்டுக் கொண்டார்.

மலேசிய ‘உத்தமம்’ அமைப்பு, இம்மாநாட்டிற்கான மலேசிய ஒருங்கிணைப்பினை மேற்கொள்ளும் என்பதையும் வெற்றிச் செல்வி தெரிவித்துக் கொண்டார்.

நேற்றைய பத்திரிக்கையாளர் மாநாட்டில் உத்தமம் மலேசியக் கிளையின் தலைவர் சி.ம.இளந்தமிழ், மற்றும் செல்லினம் குறுஞ்செயலி, முரசு அஞ்சல் மென்பொருள் ஆகியவற்றின் உருவாக்குநரும், செல்லியல் தகவல் ஊடகத்தின் தொழில்நுட்ப வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மலேசியப் பேராளர்கள் பதிவினை infittmalaysia.org என்ற இணையத்தளத்தில் மேற்கொள்ளலாம். மேலும் விபரங்களை ‘www.TamilConference.org’ இணையத் தளத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் கூடுதல் தகவல்கள் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல்:

சி.ம.இளந்தமிழ்

elantamil@gmail.com

இம்மாநாடு குறித்த கூடுதல் தகவல்கள்

மாநாட்டுக் கட்டுரை படைப்பு – http://tamilconference.org/sessions/papers

  • Concepts and techniques to improve Spoken Tamil

பேச்சுத் தமிழ் மேம்பாட்டிற்கான கருத்துகளும் உத்திகளும்

  • Importance of Tamil culture and the role of local Tamil communities in motivating Tamil learning

தமிழ் கற்பதை ஊக்குவிப்பதில் தமிழர் பண்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் உள்ளூர் தமிழ் சமுதாயத்தின் பங்கு

  • Techniques to generate interest in art and creativity

கலை மற்றும் புதிய படைப்புகளில் ஆர்வத்தைத் தூண்ட உதவும் உத்திகள்

  • Concepts and new approaches in language acquisition

மொழி கற்றல் பற்றிய கருத்துகளும் புதிய அணுகுமுறைகளும்

மாநாட்டு பட்டறை தலைப்புகள் – http://tamilconference.org/sessions/workshop

  • Tools, Techniques and Technology to improve Spoken Tamil

பேச்சுத் தமிழ் மேம்பாட்டிற்கான கருவிகள், உத்திகள் மற்றும் தொழில்நுட்பங்கள்

  • Introduction to concepts and approaches in language acquisition

மொழி கற்றல் பற்றிய கருத்துகள், அணுகுமுறைகள் – ஓர் அறிமுகம்

  • Exploring adaptive teaching methods based on language level of students

மாணவர்களின் மொழி ஆற்றலுக்கு ஏற்ப கற்பிக்கும் முறைகள்

  • Methods to improve listening and reading comprehension

கேட்டறிதல் மற்றும் படித்தறிதல் திறமைகளை மேம்படுத்தும் வழிமுறைகள்

  • Interactive activities to introduce language usage and grammar

மொழி பயன்பாடு மற்றும் இலக்கண அறிமுகம் செய்ய உதவும் செயல்பாடுகள்

  • Tips and tricks to increase student involvement

மாணவர்களின் ஈடுபாட்டை மேம்படுத்த உதவும் உத்திகள்