Home Featured இந்தியா உணவுப் பொருட்களைத் திருடிய ஏர் இந்தியா விமானப் பணியாளர் இடைநீக்கம்!

உணவுப் பொருட்களைத் திருடிய ஏர் இந்தியா விமானப் பணியாளர் இடைநீக்கம்!

609
0
SHARE
Ad

air indiaசென்னை – சென்னையிலிருந்து கொழும்பு செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்படும் உணவுப் பொருட்களை அவ்விமானத்தில் பணியாற்றும் பெண் பணியாளர் ஒருவரே திருடிய போது, அதிகாரிகளால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை இரவு கொழும்புவில் இருந்து சென்னையை வந்தடைந்த ஏஐ274 விமானத்தில், விமானப் பணியாளர் ஒருவரின் பைகளை சோதனையிட்ட அதிகாரிகள் அதில் உணவுப் பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து உடனடியாக, கண்காணிப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

அந்தப் பைகளில் விமானப் பயணிகளுக்கு வழங்கப்படும் ஜூஸ் வகைகள், பால், உணவு வகைகள், காபி மாவு, பால் மாவு மற்றும் மதுபானம் உள்ளிட்ட உணவுப் பொருட்களை இருந்துள்ளன. அதனை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் அப்பெண் பணியாளரை இடைநீக்கம் செய்துள்ளதாகவும் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ தெரிவித்துள்ளது.