இந்தச் சம்பவம் குறித்து மொகிதின் யாசின் தனது பேஸ்புக் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் மாநிலம் சுபாங் ஜெயாவில் உள்ள யுஎஸ்ஜே 4 -ல் அமைந்திருக்கும் பள்ளி ஒன்றில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியின் துவக்க விழாவிற்குச் சென்ற மொகிதினிடம், அப்பள்ளி நிர்வாகத்தினர், “உங்களைப் பேச அனுமதிக்க வேண்டாம் என ‘சில தரப்பினர்’ எங்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.
“பரவாயில்லை. இது நான் எதிர்பார்த்த ஒன்று தான்” என்று மொகிதின் தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
என்றாலும், அவ்விழாவில் கலந்து கொண்டவர்களுடன் மொகிதின் படம் எடுத்துக் கொண்டதோடு, அதைத் தனது பேஸ்புக்கிலும் பதிவு செய்துள்ளார்.